Saturday, January 31, 2009

எந்த சாக்கடைக்கு எத்தனை ஒட்டு

எந்த ஒரு தமிழனும் வரும் தேர்தலில் ஒட்டு போட விரும்பமாட்டான் .ஆனால் என்ன செய்யமுடியும் நம்மால்? நம் நிலைமை அப்படி.நம் கண் முன் இருப்பது ஏழு தகுதி அற்ற கட்சிகள்

1. தி.மு.க

தமிழின துரோகியை தலைவனாக கொண்ட ,அரசாங்க ஊழியர்களின் குடும்பங்களின் நன்றி உணர்விலேயே தன் நிகழ் கால ,வருங்கால பரம்பரையினை தமிழ் நாட்டின் நிரந்தர ஆட்சியாளர்களாக ஆக்க நினைக்கும் ஒரு கீழ்தரமான ,சுயனலவாதியின் கட்சி.

2.அண்ணா தி.மு.க

தமிழினத்தின் முதுகில் அமர்ந்து ,ஆணவ ஆட்சி செய்து ,தனக்கு எந்த ஒரு சந்ததியும் இல்லை என்றாலும் ,முடிந்த அளவு சுருட்டவும் ,தைரியமாக தமிழனை ஒரு கீழ்த்தனமான இனம் ,சொரணை இல்லாத இனம் என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லாமல் சொல்லும் தலைவியை கொண்ட ,தன் கடைசி அத்யாயத்தை எழுதி கொண்டிருக்கும் கட்சி.

3.ம.தி.மு.க

என்ன செய்வது என்று தெரியாமல்,ஒரு திருப்புமுனைக்காகவும் அதுவரை கட்சி நடத்த தன் கொள்கைகளை பற்றி கவலை கொள்ளாமலும்,நானும் இந்த குட்டையில் ஊறிய மட்டைதான் என அவ்வப்போது நிரூபிக்கும் கட்சி.

4. காங்கிரஸ்

தமிழ் மக்கள் தங்கள் வாழ்நாளில் செய்த ஒரே நல்ல செயல் மூலம் தலை முறிக்கப்பட்ட, டெல்லி தலைவர்களின் பாதம் கழுவும் ,தொண்டர்களை விட தலைவர்களை அதிகம் கொண்ட சுயநல கட்சி.

5.தே.மு.தி.க.

குருட்டு கணக்கோடு ,தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையின் பயனால் எப்படியும் ஒரு நாள் ஆட்சியை பிடுத்திவிடலாம் என நினைக்கும்,கடுகளவும் கொள்கை என்று ஒன்று இல்லாமல் ,குடும்பத்தோடு கனவுகளை சுமந்து வரும் தலைமையை கொண்ட கட்சி.6.பா.ம.க. தன் சமூகத்தின் அறியாமை என்ன என்பதை சரியாக புரிந்து ,தி.மு.க மற்றும் அண்ணா.தி.மு.க வின் தலைவர்களின் எண்ணத்தையும் ,செயலையும் சரியாக கணித்து ,தன் செல்வாக்கையும் ,குடும்ப சொத்தையும் சீராக வைத்திருக்கும் தலைமையை கொண்ட கட்சி .

7.விடுதலை சிறுத்தைகள் பா.ம.க. வின் வழியயை பின்பற்றி தன் செல்வாக்கை ,சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வளர்க்க நினைக்கும் கட்சி.

கம்னியுச்ட் மற்றும் இதர கட்சிகளை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

இங்கு நான் சொல்லிய அனைத்தும் ,நம் மக்கள் அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்.ஆனால் என்ன செய்வது ? இந்த திருடனை விட்டால் அவன் ,அவனை விட்டால் இவன் என்று தான் ஒட்டு போடவேண்டியுள்ளது.

மக்கள் என்றுமே புத்திசாலிகள்,அதனால் தான் இந்த தகுதி இல்லா தலைவர்களை அன்றைய சூல்நிலைக்குட்ப்பட்டு ,தன்னால் முடித்த அளவு பாடம் புகட்டுகிறார்கள்.

நமது தேர்தல் முடிவு என்பது ,எந்த சாக்கடைக்கு எத்தனை ஒட்டு என்பதுதான்.

வரலாறு என்பது முடிந்தபின் எழுதப்படுவது ,நினைப்பது போல் எழுதப்படுவது இல்லை என்பதை நம் தலைவர்கள் உணர்ந்தவர்கள் என்பதை நம்புவோம் .

ஒன்று மட்டும் நிச்சயம் ,காட்சிகள் மாறும்.